துபாய்: கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், 2025 ஆசிய கோப்பை தொடரில் தொடர்ந்து பேட்டிங் வரிசை மாற்றப்படுவதால் ஏற்பட்ட மன அழுத்தத்தை வெளிப்படுத்தினார். “என்னை ஹீரோவாக மட்டுமே பார்க்க முடியாது. சில நேரங்களில் நான் வில்லனாகவும், சில நேரங்களில் ஜோக்கராகவும் விளையாட வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றம் அடைய வேண்டும்,” என்று அவர் உருக்கமாக கூறினார்.
இந்திய அணியின் கடந்த ஆண்டில் டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, சஞ்சு 17 போட்டிகளிலும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். அதில் மூன்று சதங்களை அடித்து அசத்தினார். ஆனால் தற்போதைய ஆசிய கோப்பை தொடரில் அவருக்கு நிலையான பேட்டிங் வரிசை வழங்கப்படவில்லை. வங்கதேசத்துக்கு எதிரான போட்டிக்குமுன், சஞ்சு தனது அனுபவத்தை மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் உதாரணமாக கூறினார்.

துணை கேப்டன் சுப்மன் கில் தொடக்க இடத்தில் இல்லாததால், சஞ்சு 3வது, 5வது, 8வது இடங்களில் ஒவ்வொரு போட்டியிலும் மாறி விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. அணியின் துணைப் பயிற்சியாளர் ரியான் டென் அவர் 5-வது இடத்தில் சிறந்த விளையாட்டு திறமை காண்பேன் என்று நம்பியதாக கூறியிருந்தாலும், அடுத்த நாள் 8-வது இடத்தில் நிறுத்தப்படுவதால் குழப்பம் அதிகரித்துள்ளது. இதனால் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் சஞ்சு திறமையை அணியின் தேவைக்கேற்ப பயன்படுத்தவில்லையா என்ற கேள்வி எழுப்பியுள்ளனர்.
சஞ்சு தனது பேட்டி முடிவில் கூறியது, “நான் தொடக்க ஆட்டக்காரராக மட்டும் விளையாடுவேன் என்று சொல்ல முடியாது. ஏன் நான் ஒரு நல்ல வில்லனாக விளையாட முடியாது?” என்று. தொடர்ந்து அவர் கூறியது, அணியின் தேவைக்கேற்ப எந்த இடத்திலும் விளையாட தயாராக இருப்பதாகவும், சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடும் திறமை கொண்டவர் என்றும். இதுவே இந்திய அணியின் ஆசிய கோப்பை அணுகுமுறையில் சஞ்சுவின் முக்கிய பங்கு மற்றும் உணர்வை வெளிப்படுத்துகிறது.