மும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா 0-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் விளையாடிய இந்திய அணி 263 ரன்கள் சேர்த்தது. சுப்மன் கில் அபாரமாக விளையாடி 90 ரன்கள் சேர்த்தார். ரிஷப் பந்து 60 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 28 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். டெவோன் கான்வே 22 ரன்களில் தொடங்கினார். ரச்சின் ரவீந்திரா 4 ரன்களில் வெளியேறினார். டேரில் மிட்செல் 21 ரன், டாம் ப்ளன்டெல் 4 ரன், கிளென் பிலிப்ஸ் 26 ரன், இஷ் சோதி 8 ரன் என வில் யங் மட்டும் பொறுப்பான வீரராக 51 ரன்களைச் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் மேட் ஹென்றி 10 ரன்களில் ஆட்டமிழக்க, நியூசிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் நியூசிலாந்து இந்தியாவை விட 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது நாளில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ்தீப் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.