
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, தொடை காயம் காரணமாக ஷமி அணியில் இணைவதிலும் விளையாடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு உலகக் கோப்பையில் பங்கேற்ற ஷமி, காயம் காரணமாக நீண்ட நேரம் விளையாடாமல் இருந்தார். ஆனால் தற்போது சையது முஷ்டாக் அலி டிராபியில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார், அதில் 7 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியில் குறிப்பாக ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் ஷமி இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி பரிசோதனை செய்து சான்றிதழ் பெறுவார் என்றும் கூறப்பட்டது.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா, ஷமியை கண்காணித்து வருகிறோம். சையது முஷ்டாக் அலி தொடரில் விளையாடி கொண்டிருந்த போது, அவரது முழங்காலில் சிறிது வீக்கம் ஏற்பட்டது.இதனால், டெஸ்ட் போட்டிக்கு தயாராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போட்டி மற்றும் விளையாடுவதை நாங்கள் கவனமாக கண்காணித்து வருகிறோம்.
மேலும், “அவர் வலியுடன் விளையாடுவதை நாங்கள் விரும்பவில்லை. அவர் உடல்தகுதியுடன் இருக்கும்போது அணியில் சேர்ப்போம். சில மருத்துவ நிபுணர்கள் அவரை கவனித்து வருகின்றனர். அவர்களின் முடிவுகளின் அடிப்படையில், அவர் தயாராகியதும், முடிவு எடுக்கப்படும். அவரை அணியில் சேர்க்க வேண்டும்,” என்றார்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. 5 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது, அடுத்த போட்டி பிரிஸ்பேனில் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறுகிறது.