ஆஸ்திரேலியாவில் நடக்கும் ‘பார்டர்–கவாஸ்கர்’ டிராபி டெஸ்ட் தொடரின் ஒரு பகுதியாக கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர்ஸ் லெவன் அணிக்கு எதிராக இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது.
முதல் நாள் மழையால் கைவிடப்பட்டது, இரண்டாவது நாள் ஆட்டம் 46 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது, இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஸ்காட் போலன்ட் உள்ளிட்டோரின் பந்துவீச்சை தன்னம்பிக்கையுடன் கையாண்ட ஷுப்மன் கில் இந்திய அணியில் 50 ரன்கள் எடுத்தார். நிதிஷ் குமார் 42 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 27 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 42.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்காத கோஹ்லி, பும்ரா, அஷ்வின் போன்ற வீரர்கள் நெட் பிராக்டீஸில் ஈடுபட்டனர்.