புதுடெல்லி: கோகோ உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய பெண்கள் அணி 66-16 என்ற புள்ளிக்கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள இந்திராகாந்தி விளையாட்டரங்கில் கோ கோ உலகக் கோப்பை 2025 அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் இந்திய பெண்கள் அணி, தென் ஆப்பிரிக்காவுடன் மோதியது. தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய இந்திய பெண்கள் அணி 66-16 என்ற புள்ளிக்கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி தென் ஆப்பிரிக்காவை 62-42 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது. இந்திய பெண்கள் அணி இறுதிப்போட்டியில் நேபாளம் அணியை எதிர்கொள்கிறது.