பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இன்று நடைபெற்ற பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரின் 2வது நாளான இன்று மதியம் 12.50 மணிக்கு பேட்மிண்டன் குரூப் ஸ்டேஜ் ஆட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, மாலத்தீவின் பாத்திமத் நபாஹா அப்துல் ரசாக்கை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-19 மற்றும் 21-6 என்ற நேர் செட்களில் பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
முதல் செட்டை 13 நிமிடங்களில் முடித்த சிந்து, இரண்டாவது செட்டை வெறும் 14 நிமிடங்களில் கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதுவரை இந்திய அணி பதக்க வேட்டையை தொடங்கவில்லை. இருப்பினும் இறுதி போட்டியில் மனு பாக்கர் இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழாவில் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இந்தியாவின் தேசியக் கொடி அணிவகுப்புக்கு தலைமை தாங்கினார்.