ரோட்டர்டாம்: சர்வதேச சைக்கிள் பந்தய போட்டியில் நெதர்லாந்து வீராங்கனை டெமி வோலரிங் வெற்றி பெற்றுள்ளார்.
டூர் தெ பிரான்ஸ் என்ற சர்வதேச சைக்கிள் பந்தயத்தின்மூன்றாவது சுற்றில் நடப்பு சாம்பியனான நெதர்லாந்து வீராங்கனை டெமி வோலரிங் வெற்றி பெற்றார்.
நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரில் மகளிருக்கான தனி நபர் பிரிவில் 6 புள்ளி 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு போட்டி நடத்தப்பட்டது
அமெரிக்க வீராங்கனை சோலி டைகர்ட்-டை விட 5 வினாடிகள் முன்னிலை பெற்று வெற்றி பெற்ற வீராங்கனை டெமி வோலரிங், இறுதியில் மஞ்சள் ஜெர்சி அணிந்து மேடையேறினார்.