ஐபிஎல் 2025 தொடரில் மே 1ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற 50வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு, தொடரில் தங்களது ஆற்றலை மீண்டும் நிரூபித்தது. போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி ரியான் ரிக்கல்டன் 61 ரன்கள், ரோஹித் சர்மா 53 ரன்கள், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 48 ரன்கள் எடுத்ததன் மூலம் 218 ரன்கள் என்ற அபார இலக்கை நிர்ணயித்தது. பின்னர் ராஜஸ்தான் அணியை மும்பையின் பவுலர்கள் முழுமையாக கட்டுப்படுத்தினர்.

ராஜஸ்தான் அணி 117 ரன்களில் அவுட் ஆனது. ஜோப்ரா ஆர்ச்சர் 30 ரன்கள் எடுத்தவர் எனும் நிலைமை ராஜஸ்தானின் சோர்வை எடுத்துக்காட்டியது. பவுலிங்கில் கரண் சர்மா மற்றும் ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பையின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். இந்த வெற்றி மூலம் மும்பை அணிக்கு இது தொடர்ச்சியான 6வது வெற்றியாகும். மொத்தமாக 7 வெற்றிகளை பெற்றதால் மும்பை 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து பிளேஆஃப் சுற்றை நோக்கி முன்னேறியுள்ளது.
போட்டியின் முக்கிய தருணங்களில் ஒன்று ரோஹித் சர்மாவை சார்ந்தது. அவர் 7 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து தடுமாறியபோது, ராஜஸ்தான் வீரர் பரூக்கி அவரை எல்பிடபிள்யூவுக்கு ஆப்பீல் செய்தார். நடுவர் அவுட் என அறிவித்ததும், ரோஹித் சர்மா ரிவ்யூ எடுக்க முயன்றார். ஆனால் ரிவ்யூ நேரம் முடிந்த பிறகு (15 நொடிகள்) அவர் அதை கேட்டார். இந்த நிலையில், 3வது நடுவர் அவரது ரிவ்யூவை ஏற்று, பந்து ஸ்டம்ப் லைனுக்கு வெளியே இருப்பதைக் கண்டறிந்து அவுட் இல்லை எனத் தீர்ப்பு மாற்றப்பட்டது.
இந்த முடிவை எதிர்த்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். 15 நொடிகள் முடிந்த பிறகு ரிவ்யூ கேட்டதையும், அதைநடுவர்ஏற்றதையும் அவர்கள் சட்டவிரோதமாக கூறினர். அந்த தருணம் புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, நடுவர்களின் நியாயமற்ற நடவடிக்கைகள் மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளன.
இதேபோல் கடந்த வருடங்களில் மும்பை அணிக்காகநடுவர்களின் தீர்ப்புகள் சாதகமாக இருந்த சம்பவங்களும் மீண்டும் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக RCB-க்கு எதிரான ஒரு போட்டியில் கடைசி பந்தில் லசித் மலிங்காவின் நோ-பாலைநடுவர் தவறவிட்டதையும் ரசிகர்கள் நினைவுபடுத்தியுள்ளனர். இந்த சர்ச்சைகள் மும்பை அணியின் வெற்றியை மட்டுமல்லாது, போட்டியின் நியாயத்தைப் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன.
இந்த வெற்றியுடன் மும்பை அணி தங்களது துடிப்பான வெற்றிச்சுவையை தொடர்கிறது. ஆனால் நடுவர் தீர்ப்புகளின் சர்ச்சை தொடரில் நம்பகத்தன்மைக்கு கோளாறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இப்போட்டியால் மும்பை அணியின் நிலை உறுதியானாலும், அந்த நியாய விவகாரங்கள் தொடரின் மரியாதைக்கே சவால் விடுக்கின்றன.