புது டெல்லி: ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப்பில் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை இஷா சிங் தங்கம் வென்றார். ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் தொடர் சீனாவின் நிங்போவில் நடந்து வருகிறது.
நேற்று நடைபெற்ற பெண்கள் தனிநபர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை இஷா சிங் 242.6 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

சீன துப்பாக்கி சுடும் வீராங்கனை யாவோ இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரியாவின் ஓ யே-ஜின் வெண்கலப் பதக்கம் வென்றார்.