மும்பை: தனக்கு சதம் அடிப்பது முக்கியமல்ல அணியின் வெற்றியை முக்கியம் என்பதை நிரூபிக்கும் வகையில் தனது முதல் சதத்தை தியாகம் செய்த கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் – க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 97 ரன்களில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், சதமடிக்க வாய்ப்பிருந்தும் அதனை தியாகம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இறுதி ஓவரில் விளையாடியபோது, ‘எனது சதத்தை பார்க்காதே, நீ விளையாடு’ என தன்னிடம் கூறியதாக ஷஷாங்க் சிங் தெரிவித்துள்ளார்.
தனது முதல் சதத்தை தியாகம் செய்த ஸ்ரேயாஸ் ஐயரை நெட்டிசன்கள் பாராட்டித் தள்ளுகின்றனர். இந்த சதம் அடித்திருந்தால் தனக்கு பெரிய அளவில் பெருமை கிடைத்திருக்கும் எனத் தெரிந்திருந்தும், அதனை கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் புறம் தள்ளியுள்ளார்.
அணியின் வெற்றியே தனக்கு பெருமை என அவர் நினைத்துள்ளதாக நெட்டிசன்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் ஸ்ரேயாசை பாராட்டி வருகின்றனர்.