இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, தற்போது இங்கிலாந்து மண்ணில் சாதனை படைக்க மிகவும் அருகில் நிற்கிறார். ஆண்டர்சன்-டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் அவர் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தாலும், ஏற்கனவே 12 விக்கெட்டுகளை கைப்பற்றி கவனம் ஈர்த்துள்ளார்.
இங்கிலாந்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் பட்டியலில் இஷாந்த் சர்மாவின் சாதனையை (48 விக்கெட்டுகள்) 49 விக்கெட்டுகளுடன் பும்ரா தாண்டி விட்டார். இப்போது, அவர் கணிக்கப்படும் அடுத்த இலக்கு – வாசிம் அக்ரமின் சாதனை!

வாசிம் அக்ரம் 14 டெஸ்ட் போட்டிகளில் 54 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். பும்ரா இதுவரை 11 போட்டிகளில் 49 விக்கெட்டுகள் எடுத்துள்ளதால், இன்னும் 5 விக்கெட்டுகளை பெற்றால், இங்கிலாந்து மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசிய வீரராக வரலாற்றில் இடம் பிடிக்கிறார்.
இவரது எதிர்வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பு உறுதி செய்யப்படவில்லை என்றாலும், அவர் விளையாடும் பட்சத்தில் இந்த பெரும் சாதனையை முறியடிக்கக் கூடிய வாய்ப்பு மிகுந்துள்ளது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அவரது பங்களிப்புக்காக காத்திருக்கிறார்கள்.