கோலாலம்பூர் : ஜூனியர் மகளிர் டி20.இறுதிப் போட்டியில் இன்று இந்தியா -தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
2வது ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தையும், தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தியது.
இதையடுத்து, இந்தியா -தென் ஆப்பிரிக்கா இடையிலான இறுதிப்போட்டி இன்று(பிப்.2) பகல் 12 மணிக்கு கோலாலம்பூரில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.