பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் வெண்கலம் வென்றார். இது இந்தியாவின் முதல் வெண்கலம் ஆகும். முதல் பதக்கம் வென்ற மனு பாகருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.33வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெறவுள்ளது.
பெண்களுக்கான 10 மீட்டர் தனிநபர் ‘ஏர் பிஸ்டல்’ பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் மனு பாகர் போட்டியிடுகிறார். இதில் சிறப்பாக விளையாடிய மனு பாகர் 221.7 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். மேலும், ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
12 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது. இந்தியாவின் ககன் நரங் (10 மீ., ‘ஏர் ரைபிள்’) கடைசியாக லண்டன் ஒலிம்பிக்கில் (2012) வெண்கலம் வென்றிருந்தார். இது இந்தியாவின் 5வது ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் பதக்கம் ஆகும். இதுவரை ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் கிடைத்துள்ளது. தென் கொரியாவின் ஓ யே ஜின் (243.2 புள்ளிகள்), கிம் யெஜி (241.3) ஆகியோர் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர்.
பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள்
பாரீஸ் ஒலிம்பிக் 2024ல் இந்தியாவின் முதல் பதக்கம் (வெண்கலம்) வென்ற மனு பாக்கருக்கு வாழ்த்துகள். துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளதால், இந்த வெற்றி இன்னும் சிறப்பு வாய்ந்தது என்று பிரதமர் மோடி கூறினார்.
பாராட்டு குவிகிறது
* ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பேக்கரின் சாதனை பெண்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக ஜனாதிபதி திராபுபதி முர்மு பாராட்டியுள்ளார்.
* ஹரியானா மாநிலத்தின் வலிமைமிக்க மங்கா மனு பேக்கர் நாட்டையும், மாநிலத்தையும் பெருமைப்படுத்தியுள்ளதாக முதல்வர் நயாப் சிங் கூறியுள்ளார்.