மும்பை: மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது. ஐபிஎல் தொடரில் மும்பை அணி பெற்ற 150-வது வெற்றி இதுவாகும். ஐபிஎல் தொடரில் 150 வெற்றிகளை ருசித்த முதல் அணி என்ற பெருமையையும் மும்பை பெற்றுள்ளது.

அந்த அணி இதுவரை 271 போட்டிகளில் விளையாடி 150ல் வெற்றியும், 121ல் தோல்வியும் கண்டுள்ளது. மும்பையைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் 140 வெற்றிகளையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 134 வெற்றிகளையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 129 வெற்றிகளையும், டெல்லி கேபிடல்ஸ் 121 வெற்றிகளையும், பஞ்சாப் கிங்ஸ் 117 வெற்றிகளையும், ராஜஸ்தான் ராயல்ஸ் 114 வெற்றிகளையும் பெற்றுள்ளன.