மும்பை: மும்பையில் உள்ள மும்பை கால்பந்து அரங்கில் நேற்று நடந்த இந்தியன் சூப்பர் லீக் தொடரில் மும்பை சிட்டி எப்சி மற்றும் சென்னையின் எப்சி அணிகள் மோதின. மும்பை அணி 4-3-3 வடிவத்திலும், சென்னையின் எஃப்சி 3-4-1-2 என்ற வடிவத்திலும் களமிறங்கியது. 5-வது நிமிடத்தில் சென்னையின் எப்சி அணியின் இர்பான் யத்வாத் உதவியுடன் பந்தை பெற்ற லூகாஸ் பிரம்பில்லா, பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து ஷாட் அடித்தார்.
8-வது நிமிடத்தில் மும்பை அணியின் வான் நீஃப் பந்தை வேகமாக பாஸ் செய்து பாக்ஸ் பகுதிக்குள் நுழைய முயன்றார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அந்நிலையில் சென்னையின் எப்சி அணியின் ரியான் எட்வர்ட்ஸ் பந்தை முழுமையாக கிளீயர் செய்ய தவறினார். காலில் இருந்து விலகி விழுந்த பந்தை மும்பை அணியின் நிகோலஸ் கரேலிஸ் பெற்றுக்கொண்டார், அவர் பாக்ஸின் மையத்திலிருந்து பந்தை ஷாட் செய்து வலையின் இடது மூலையில் துளைத்தார்.
மும்பை சிட்டி எஃப்சி 1-0 என முன்னிலை பெற்றது. 19-வது நிமிடத்தில் சென்னையின் எப்.சி.யின் கியான் நஸ்சிரியின் உதவியுடன் பாக்ஸின் வலது பக்கத்திலிருந்து பந்தை பெற்ற லூகாஸ் பிரம்பிலா, பாக்ஸின் வலது பக்கத்திலிருந்து ஷாட் அடித்தார், ஆனால் மும்பை கோல்கீப்பர் ரெஹ்னேஷ் பரம்பா அதை நடுவில் தடுத்தார். பாதி முடிவில் மும்பை சிட்டி எஃப்சி 1-0 என முன்னிலையில் இருந்தது. 48-வது நிமிடத்தில் சென்னையின் எப்.சி.யின் டேனியல் சிமா சுக்வு கொடுத்த கிராஸைப் பெற்ற இர்பான் யத்வாத், பாக்ஸின் மையப் பகுதியில் இருந்து பந்தை தலையால் முட்டி முயங்கினார்.
ஆனால் பந்து கம்பத்தில் மோதி வைட் ஆனது. 84-வது நிமிடத்தில் பிராண்டன் பெர்னாண்டஸ் கொடுத்த கார்னர் கிக்கை மும்பை சிட்டி எஃப்சி எடுத்து 6 அடி தூரத்தில் இருந்து கோல்போஸ்ட்டுக்கு மேல் தலையால் முட்டியது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட முடிவில் மும்பை சிட்டி எஃப்சி 1-0 என முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து, காயங்களுக்கு இழப்பீடாக 7 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதில் சென்னையின் எப்சி அணி இறுதி வரை போராடியும் கோல் அடிக்க முடியவில்லை.
முடிவில் மும்பை சிட்டி எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இது அந்த அணிக்கு கிடைத்த 5-வது வெற்றியாகும். 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை சிட்டி எப்.சி., 5 வெற்றி, 5 டிரா, 2 தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று 7வது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னையின் எஃப்சி அணிக்கு இது 6-வது தோல்வியாகும். அந்த அணி 13 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 3 டிரா, 6 தோல்வி என 15 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் நீடிக்கிறது.