மும்பை: ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு 218 ரன்கள் டார்கெட் வைத்து அசத்தியுள்ளது மும்பை அணி.
தொடக்கம் முதலே அதிரடி காட்டிய மும்பை அணி அதிவேகமாக ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரிக்கல்டன் (61) மற்றும் ரோஹித் சர்மா(53) அரைசதம் அடித்து அசத்தினர். இந்த போட்டியில் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.
அடுத்த வந்த சூர்ய குமார் யாதவும், ஹர்திக் பாண்டியாவும் அதிரடிகாட்ட ரன்கள் ராக்கெட் வேகத்தில் ஏறியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 217 ரன்களை மும்பை அணி குவித்தது. இதனால் ராஜஸ்தான் அணிக்கு 218என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.