டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிய தமிழக வேகப்பந்துவீச்சாளர் டி. நடராஜன், ஐபிஎல் 2025 போட்டியில் கிடைத்த அரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்தத் தவறியுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடந்த இந்த போட்டியில், டெல்லி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்தது. பின்னர் குஜராத் அணியின் துவக்க வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் சிறப்பாக ஆடி, விக்கெட் இழக்காமல் வெற்றியை சுலபமாக பெற்றனர்.

இந்த நேரத்தில் நடராஜன் பவுலிங் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அவர் மூன்று ஓவர்கள் பந்து வீசி 49 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஒரு ஓவருக்கு சுமார் 16.3 ரன்கள் ஏடுத்தார். இதற்குமுன் நடந்த 10 போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரை பயன்படுத்தாதது குறித்து சிலர் விமர்சனம் செய்திருந்தனர்.
அடுத்ததாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசியும், அந்தப் போட்டி மழையால் நிறுத்தப்பட்டதால் அவரது ஆட்டம் சரியாக கணிக்கப்படவில்லை. அவர் 1.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி 4 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லாததால், டெல்லியின் வேகப்பந்து பொறுப்பை நடராஜன் தாங்க வேண்டியிருந்தது. அக்சர் படேலுடன் தொடக்க பவுலராக பந்துவீசிய அவர், எதிரணியின் துவக்க வீரர்களால் சுலபமாக கையாளப்பட்டார். சாய் சுதர்சன் 108 ரன்களும், சுப்மன் கில் 93 ரன்களும் எடுத்தனர்.
10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது. மற்ற பவுலர்களும் அதிகம் ரன்கள் விட்டாலும், நடராஜன் தான் அதிகம் செலவழித்த பவுலராக முடித்தார்.
அடுத்து நடைபெறும் போட்டிகளில் அவர் மீண்டும் தன்னம்பிக்கையுடன் பந்து வீசி, விக்கெட்டுகளை பெற்றுத் தருவாரா என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.