துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் லீக் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. இதனிடையே 2-வது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது.
சாம்பியன்ஸ் டிராபியின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில், நியூசிலாந்து – தென் ஆப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இரு அணிகளும் இதுவரை டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை.
2009 மற்றும் 2010 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து பட்டத்தை இழந்தது. இதனிடையே, கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவிடம் தென்னாப்பிரிக்கா தோல்வியடைந்தது.