புதுடெல்லி: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) முதல் பெண் தலைவர் பி.டி.உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டிசம்பர் 2022-ல், முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையில், ஐஓஏ கவுன்சில் உறுப்பினர்கள் விதிகளை மீறியதாக குற்றம் சாட்டிய பி.டி.உஷா விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
ஆனால் ஐஓஏ தலைவரின் அதிகாரத்தை பயன்படுத்தி அவர் தன்னிச்சையாக செயல்படுவதாக உறுப்பினர்கள் அவருக்கு எதிராக புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்துடனான ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தால் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ.24 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை பி.டி.உஷா மறுத்துள்ளார். இந்நிலையில் பி.டி.உஷாவுக்கு எதிராக இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இத்தீர்மானம் வரும் 25-ம் தேதி நடைபெறும் சங்கத்தின் சிறப்பு கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.