துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவு தகுதி சுற்றில் இந்தியாவின் ரமிதா, அர்ஜூன் பபுதா ஜோடி 628.7 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தையும், இளவேனில் வாலறிவன், சந்தீப் சிங் ஜோடி 626.3 புள்ளிகள் சேர்த்து 12-வது இடத்தையும் பெற்று ஏமாற்றம் அளித்தனர். 28 ஜோடிகள் கலந்து கொண்ட தகுதி சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே பதக்க சுற்றுக்கு முன்னேறும்.
இதனால் இந்திய ஜோடிகள் தகுதி சுற்றுடன் வெளியேறியது. ரமிதா, அர்ஜூன் பபுதா ஜோடி நூலிழையில் பதக்க வாய்ப்பை தவறவிட்டது. ஏனெனில் தகுதி சுற்றில் கடைசி முன்னேறிய ஜெர்மனி ஜோடி 629.7 புள்ளிகளே எடுத்திருந்தது. இது ரமிதா, பபுதா அர்ஜூன் ஜோடி சேர்த்த புள்ளிகளை விட ஒன்றுமட்டுமே அதிகம். அதேவேளையில் 629.6 புள்ளிகள் சேர்த்து 5-வது இடம் பிடித்த நார்வே ஜோடியும் பரிதாபமாக வெளியேறியது.