மும்பை: டெல்லி அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கே எல் ராகுல் முதல் போட்டியிலேயே ஆப்சென்ட் ஆனது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ராகுல் ஆப்சென்ட். ஆனதற்கு இதுதான் காரணம் என்று விபரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். அது என்ன காரணம் தெரியுங்களா?
ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு டெல்லி அணியின் கேப்டனாக செயல்படுவார் என கணிக்கப்பட்ட KL ராகுல், முதல் போட்டியில் களமிறங்கவே இல்லை.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி பந்துவீசி வருகிறது. ஆனால், பிளேயிங் XI-ல் KL ராகுல் இல்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விளையாடவில்லை என கேப்டன் அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.
ராகுலின் மனைவி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.