புதுடெல்லி: ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய மகளிர் அணியில் இருந்து தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா நீக்கப்பட்டுள்ளார். இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்கிறது. இந்தத் தொடரின் போட்டிகள் பிரிஸ்பேனில் டிசம்பர் 5 மற்றும் 8ஆம் தேதிகளிலும், பெர்த்தில் டிசம்பர் 11ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நீடிப்பார்கள். கடந்த ஓராண்டில் 6 போட்டிகளில் 108 ரன்கள் மட்டுமே எடுத்த ஷபாலி வர்மா தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
2023ல் ஷபாலி வர்மா தலைமையிலான இளம் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. ஆனால் ODIகளில் அவரது சராசரி 23.00 மட்டுமே, மேலும் அவர் சமீபத்திய நியூசிலாந்து தொடரில் 3 போட்டிகளில் 56 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இதற்கிடையில், ஹர்லீன் மற்றும் பிரியா புனியா ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர். புதிய அணி விவரங்களில் ஹர்மன்ப்ரீத் சிங், ஸ்மிருதி மந்தனா, பிரியா புனியா, ஜெமிமா, ஹர்லீன், யாஸ்திகா, ரிச்சா கோஷ், தேஜல், தீப்தி ஷர்மா, மின்னு மணி, பிரியா மிஸ்ரா, ராதா, திதாஸ் சாது, அருந்ததி, ரேணுகா மற்றும் சைமா ஆகியோர் அடங்குவர்.