புதுடில்லி: ஒரு நாளைக்கு ஒருமுறை தான் சாப்பிடுவேன் என்று இந்திய பந்து வீச்சாளர் ஷமி தெரிவித்துள்ளார்.
இந்திய பந்துவீச்சாளர் ஷமி தனது உணவுப் பழக்கம் குறித்து கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். பொதுவாகவே தான் இனிப்புகள், நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதில்லை என்று கூறிய அவர், ஒரு நாளைக்கு ஒருமுறை தான் சாப்பிடுவேன் என்றார்.
2015-ம் ஆண்டு முதல் காலை, மதிய உணவு சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, இரவு உணவு மட்டுமே சாப்பிடுவதாகக் கூறினார். எனினும், பிரியாணி தனது Cheat Meal என்றார்.