2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கேப்டனாக செயல்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் தனது மிகச்சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்தியதன் மூலம் கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக ஐபி.எல் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. கடந்த ஆண்டு லீக் போட்டிகளிலிருந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றிலும், இறுதிப் போட்டியிலும் எளிதாக கோப்பையை வென்றது.

இந்த ஆண்டு ஷ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா அணியின் சிறந்த கேப்டனாகத் தான் செயல்பட்டார். பலம் வாய்ந்த வீரர்களுடன் கூடிய அணி, அவரின் வழிகாட்டுதலின் மூலம் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால் 2024-ஆம் ஆண்டு ஐபி.எல் தொடரின் முடிவுக்கு பின்னர், 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக கொல்கத்தா அணி ஷ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது. இதன் காரணமாக, ஷ்ரேயாஸ் ஐயர் 26 கோடி 75 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார், மேலும் அவரை அணி கேப்டனாக நியமித்தனர்.
2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி விளையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஆகியோர் அணியின் நிர்வாகம் சார்பில் நேற்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, சில வெளிப்படையான கருத்துக்களை பகிர்ந்தனர்.
இந்த சந்திப்பில், ஷ்ரேயாஸ் ஐயர் ஐ.பி.எல் தொடரில் எந்த இடத்தில் விளையாட விரும்புகிறீர்கள் என்பது குறித்து கூறினார். “நான் மூன்றாவது இடத்தில் விளையாட விரும்புகிறேன். ஏனெனில், இந்த இடத்தில் என் இயல்பான ஆட்டம் வெளிவருவதோடு பெரிய ரன்களையும் குவிக்க முடியும். எனவே, இந்த இடத்தில் களமிறங்குவதில் கவனம் செலுத்தி வருகிறேன்,” என அவர் குறிப்பிட்டார்.
மேலும், “இந்த முறை நான் அங்கீகரிக்கும் வகையில் மிகச்சிறப்பாக செயல்படுவேன்,” என்று நம்பிக்கையுடன் கூறினார். இதனால், அவர் 2025 ஐ.பி.எல் தொடரில் நிச்சயமாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், “ரிக்கி பாண்டிங் உடன் ஏற்கனவே நான் மூன்று ஆண்டுகள் பயணித்துள்ளேன். அவர் மைதானத்தில் இருந்தும் வெளியே இருந்தும் வீரர்களை மிகச்சிறப்பாக ஆதரிக்க கூடியவர். இந்த தொடரின் முடிவில் கோப்பையை வெல்வது தான் முக்கியம்,” என ஷ்ரேயாஸ் ஐயர் குறிப்பிட்டார்.