சென்னை: இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா திருமணம் திடீர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் ெளியாகி உள்ளது.
இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீரர் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி மந்தனா- பலாஷ் முச்சல் திருமணம் இன்று நடைபெற இருந்தது.
இந்நிலையில், ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு அவர் தொடர் சிகிச்சை பெற்று வருவதால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீநிவாஸ் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.