புதுடெல்லி: கிரிக்கெட் அரங்கில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக கருதப்படும் தென் ஆப்பிரிக்க அணி ஐசிசி போட்டிகளில் அரை இறுதியில் அதிக தோல்விகளை சந்தித்த அணியாக உள்ளது.
கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்று தென் ஆப்ரிக்கா. பேட்டிங், பவுலிங், பில்டிங் என அனைத்திலும் புலியாக பாய்ந்தாலும், ஐசிசி போட்டிகள் என்றால் பூனையாக மாறிவிடுவார்கள்.
ஐசிசி அரையிறுதியில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற மோசமான சாதனை அவர்களிடமே உள்ளது. இதுவரை 12 முறை தோல்வியை கண்டுள்ளனர்.
11 தோல்விகளுடன் 2வது இடத்தில் நியூசிலாந்து உள்ளது.