லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் தென் ஆப்ரிக்கா, முதல் ஆட்டத்தில் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. ஆரம்பத்தில் ஜமை ஸ்மித் (54), டக்கெட் (5) ஆகியோர் களம் இறங்கினார்கள். ஜோ ரூட் (14) விரைவில் அவுட்டானார். கேப்டன் ஹாரி புரூக் 12 ரன்களில் ரன் அவுட்டானார். 82 ரன்களில் 2 விக்கெட்டுகள் என இருந்த இங்கிலாந்து அணி பின்னர் முற்றிலும் வீழ்ச்சி கண்டது.

கேஷவ் மஹாராஜ் (4 விக்கெட்), முல்டர் (3 விக்கெட்) ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 24.3 ஓவர்களில் இங்கிலாந்து 131 ரன்னில் ஆல் அவுட்டானது. இது 1975 உலகக்கோப்பைக்கு பிறகு லீட்ஸ் மைதானத்தில் பதிவான குறைந்தபட்ச ஒருநாள் ஸ்கோராகும்.
எளிய இலக்கை துரத்தி வந்த தென் ஆப்ரிக்கா, மார்க்ரம் அபாரமாக ஆடியார். 23 பந்தில் அரைசதம் விளாசிய அவர், 86 ரன்கள் எடுத்து அவுட்டானார். தென் ஆப்ரிக்க அணி 20.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 137 ரன் எடுத்து வெற்றியை பதிவு செய்தது. ரிக்கிள்டன் (31*), பிரவிஸ் (6*) அவுட்டாகாமல் இருந்தனர். இதனால் தொடர் 1-0 என தென் ஆப்ரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.