இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற தென்னாப்பிரிக்கா, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் சராசரியாக 63.33 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்து, தென்னாப்பிரிக்கா தனது சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இதில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். மறுபுறம், இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளுக்கு காத்திருக்காமல் இருக்க ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எஞ்சிய 3 ஆட்டங்களில் 2 வெற்றி, ஒரு டிராவை பதிவு செய்ய வேண்டும். இது நடந்தால், எந்த பிரச்சனையும் இல்லாமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம்.