பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் ஒருநாள் போட்டியிலேயே தென் ஆப்ரிக்க சுழற்பந்து வீச்சாளர் பிரெனெலன் சுப்ராயன் சர்ச்சையில் சிக்கினார். அம்பயர்கள் அவரது பந்துவீச்சு விதிமுறைக்கு புறம்பாக உள்ளது என புகார் செய்தனர்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த சுப்ராயன், ஆகஸ்ட் 19ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமானார். அவரது பந்துவீச்சு எறிவது போல் இருப்பதாக சந்தேகம் எழுந்தது. விதிகளின்படி, அவர் பிரிஸ்பேனில் உள்ள தேசிய கிரிக்கெட் மையத்தில் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்.
அங்கு செய்யப்பட்ட ஆய்வில், அவர் பந்து வீசும் போது முழங்கை 15 டிகிரிக்குள் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இது ஐசிசி அனுமதிக்கும் வரம்புக்குள் வரும் என்பதால், அவருக்கு தொடர்ந்து பந்து வீச அனுமதி அளிக்கப்பட்டது.
முதல் போட்டியிலேயே சிக்கலில் சிக்கிய போதிலும், ஆய்வு முடிவால் சுப்ராயனின் சர்வதேச கிரிக்கெட் பயணம் தொடர வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரது எதிர்காலம் குறித்து தென் ஆப்ரிக்க அணி நம்பிக்கையுடன் உள்ளது.