தஞ்சாவூர்: தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியின் மாணவிகள் இருவர் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான மேசைப்பந்து டேபிள் டென்னிஸ் போட்டியில் மூன்றாமிடம் பெற்று தலா ரூ 50,000 பரிசு பெற்றுள்ளனர்.
மூன்றாமாண்டு இயற்பியல் துறை மாணவி புனிதா, இரண்டாமாண்டு பி.எஸ்ஸி இயற்பியல் மாணவி சிவரஞ்சனி ஆகியோர் கடந்த 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை செங்கல்பட்டு தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கு பெற்றனர்.
இரட்டையர் பிரிவில் இம்மாணவிகள் மூன்றாம் இடம் பெற்று தலா ரூ 50,000 பரிசு பெற்றனர். இம்மாணவிகளைக் கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர், உடற்கல்வி இயக்குநர் தேன்மொழி, உடற்கல்வி பயிற்சி ஆசிரியர் மகேஸ்வரி, பள்ளியிலிருந்து பயிற்சி தரும் உடற்கல்வி ஆசிரியர் விஜயகுமார் ஆகியோர் வாழ்த்தினர்.