வாழை தோல், முட்டை ஓடு, தேயிலை இலைகள், அரிசி கழுவுநீர் மற்றும் காய்கறி தோல்கள் போன்றவை சமையலுக்குப் பிறகு வீணாக குப்பையில் போடப்படுகின்றன. ஆனால், இவை அனைத்தும் செடிகளுக்கே உரமாகச் செயல்படுகின்றன என்பது மிக முக்கியமான உண்மை. இவை ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு, மண்ணின் தரத்தையும் மேம்படுத்துகின்றன.

வாழைப்பழ தோலில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டங்கள் வேர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. அதனை சிறிய துண்டுகளாக வெட்டி மண்ணில் புதைக்கலாம் அல்லது நன்றாக ஊறவைத்து தண்ணீராகக் கொண்டு செடிகளுக்கு ஊற்றலாம். இது பசுமை வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
தேயிலை இலைகள் மண்ணுக்கு கரிமப் பொருட்களையும், கொஞ்சம் அமிலத்தன்மையும் தருகின்றன. பசுமை மற்றும் பூச்சியை விரட்டுவதற்கும் இது பயனளிக்கிறது. இலைகளை நன்கு உலர்த்தி, பால் மற்றும் சர்க்கரை இல்லாத நிலையில் அதை மண்ணில் கலக்கலாம். முட்டை ஓடுகளும் கால்சியம் வழங்குவதால் வேர்களுக்கு வலிமை சேர்க்கின்றன.
அரிசி கழுவும் நீர் மற்றும் காய்கறி தோல்களில் உள்ள தாதுக்கள் மண்ணை ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக மாற்றுகின்றன. இந்த இயற்கை முறைகள், வீட்டுத் தோட்டத்தில் பசுமை வளர்ச்சியை அதிகரிக்க நம்மால் எளிதில் செய்து முடிக்கக்கூடியவை. சுற்றுச்சூழல் பாதுகாப்பும் கூட.