துபாய்: 2025 பிப்ரவரி – மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி அட்டவணை குறித்து நாளை (நவ. 29) இறுதி முடிவு எடுக்கப்படும். கடைசியாக 1996ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றன.அதன் பிறகு பாகிஸ்தானில் ஐசிசி போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. 2008ல் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்குச் செல்ல இந்தியா மறுத்துவிட்டது.2009ல் லாகூரில் இலங்கை வீரர்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு எந்த அணியும் பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை.
இந்நிலையில் ஆசிய கோப்பை 2021ம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்தாலும் இந்திய அணி தனது ஆட்டங்களை இலங்கையில் விளையாடியது. தற்போது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்தியா தனது போட்டிகளை துபாயில் நடத்த வேண்டும் என்று கூறி வருகிறது. இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) மறுப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஐசிசியின் புதிய தலைவராக, இந்தியாவின் ஜெய் ஷா, டிசம்பர் 1, 2023 முதல் பொறுப்பேற்க உள்ளார். தற்போதைய ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே தலைமையில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்து இறுதி தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அதன்படி நவம்பர் 29ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஐசிசி இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்கும்.