பாரீஸ்: உலக நாடுகள் பங்கேற்கும் 2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இன்று (ஜூலை 26) கோலாகலமாக தொடங்குகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பிரான்ஸ் தலைநகரில் 33வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று (ஜூலை 26) தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி நிறைவடைகிறது.
இந்தப் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள் பங்கேற்கின்றனர். இம்முறை ஆண், பெண் வீரர்கள் சம எண்ணிக்கையில் பங்கேற்கின்றனர். மொத்தம் 32 விளையாட்டுகளில் 46 பந்தயங்கள் மற்றும் 324 பிரிவுகள் நடத்தப்படுகின்றன.
இந்த முறை அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து 592 பேரும், சீனாவில் இருந்து 338 பேரும் இம்முறை ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர். ஜப்பான், இங்கிலாந்து, தென் கொரியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர். .
117 பேர் கொண்ட இந்திய அணி
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவில் இருந்து 117 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. வில்வித்தை, தடகளம், பூப்பந்து, குத்துச்சண்டை, குதிரையேற்றம், ஹாக்கி, கோல்ஃப், ஜூடோ, படகோட்டம், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் உள்ளிட்ட 16 விளையாட்டுகளில் 70 ஆண்களும், 47 பெண்களும் பங்கேற்கின்றனர்.