மும்பை: கிரிக்கெட் வீரர் தோனி நீக்கியதால் ஓய்வு பெற முடிவெடுத்தேன் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.
2015-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் சேவாக். ஆனால், 2008-09 காமன்வெல்த் போட்டிகளின்போது தோனி தன்னை அணியில் இருந்து நீக்கியபோதே ஓய்வை அறிவிக்க நினைத்ததாக சேவாக் கூறியுள்ளார்.
ஆனால், அப்போது சச்சினிடம் இதுகுறித்து ஆலோசித்தபோது, உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என கூறியதாகவும், அதன்பிறகு கோப்பை வென்ற 2011 உலகக்கோப்பை அணியிலும் இடம்பெற்று நல்ல ஸ்கோர் செய்ததாக தெரிவித்துள்ளார்.