சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 5-ம் தேதி நடக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. ரசிகர்கள் இன்று காலை 10.15 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் வாங்கலாம். டிக்கெட்டுகளை chennaisuperkings.com மற்றும் district.in என்ற இணையதளங்களில் வாங்கலாம்.