தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா பங்கேற்கிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, இன்று கெபெஹாவில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.
கடந்த போட்டியில், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் அதிரடியாக 50 பந்துகளில் 107 ரன்கள் குவித்தார். மீதமுள்ள பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படாததால் மிடில் ஆர்டரில் சரிவு ஏற்பட்டது.
அபிஷேக் சர்மா தொடர்ந்து தடுமாறியதால், இந்தியாவின் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் விரைவாக ரன் சேர்க்க முடியாமல் 202/8 என்ற நிலையில் முடித்தனர். மிடில் ஆர்டர் மற்றும் பின்வரிசை வீரர்கள் இன்று சிறப்பாக விளையாட வேண்டும்.
இந்தியாவின் பந்துவீச்சு வலுவாக உள்ளது. கடந்த போட்டியில் பிஷ்னோய் மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வேகப்பந்து வீச்சில் அவேஷ் கான் மற்றும் அர்ஷ்தீப் சிங் மிரட்டினால், இந்தியா தொடரில் இரண்டாவது வெற்றிக்கு செல்ல முடியும்.
தென்னாப்பிரிக்காவின் முக்கிய வீரர்கள் குறைவாக உள்ளனர். கேப்டன் மார்க்ராம், டேவிட் மில்லர், கிளாசன் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.