நாக்பூர் : நாக்பூரில் நடந்த இறுதி ஆட்டத்தில் ரஞ்சி கோப்பையை தட்டி தூக்கி உள்ளது விதர்பா அணி. மூன்றாவது முறையாக ரஞ்சிக்கோப்பையை இந்த அணி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாக்பூரில் நடந்த இறுதி ஆட்டத்தில், முதல் இன்னிங்ஸில் விதர்பா அணி 379 ரன்கள் எடுத்தன, கேரளா அணி 342 ரன்களும் எடுத்தன. இதனால் கோப்பை யாருக்கு கிடைக்கும் என்ற பரபரப்பு எழுந்தது.
இந்நிலையில் நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில், விதர்பா 9 விக்கெட் இழப்பிற்கு 375 ரன்கள் எடுத்தது. 2ஆவது இன்னிங்ஸ் முடியாததால், ஆட்டம் டிராவில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் 37 ரன்கள் முன்னிலை பெற்றதால், அந்த அணி கோப்பையை கைப்பற்றியது. 3ஆவது முறையாக ரஞ்சி கோப்பையை விதர்பா அணி வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை எடுத்து விதர்பா அணிக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டும், வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.