பார்படாஸ்: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ரோகித் தலைமையிலான இந்திய அணி. இந்தப் போட்டியில் 76 ரன்கள் எடுத்த கோலி, ஆட்ட நாயகன் விருதை வென்றார். அதன்போது இதுவே தனது கடைசி சர்வதேச டி20 போட்டி என அவர் அறிவித்தார்.
“இதுதான் எனது கடைசி டி20 உலகக் கோப்பை தொடர். இதைத்தான் நான் சாதிக்க வேண்டும் என விரும்பினேன். ஒரு நாள் ரன் எடுக்க முடியாது என்ற எண்ணம் உங்களுக்கு வரும். கடவுள் மிகப் பெரியவர். இப்போது இல்லை என்றால் எப்போது என்ற தருணம் எங்களுக்கு இது. இந்திய அணிக்காக நான் விளையாடும் கடைசி டி20 போட்டி இதுதான்.
உலகக் கோப்பையை ஏந்த வேண்டுமென விரும்பினேன். இது ஓபன் சீக்ரெட். அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கான நேரம் இது. அவர்கள் டி20 ஆட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். இது நீண்ட காத்திருப்பு. ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டுமென்ற காத்திருப்பு. ரோகித்துக்கு இது 9-வது டி20 உலகக் கோப்பை தொடர். எனக்கு 6-வது தொடர். உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது கடினம். இந்த நாள் அற்புதமான நாள். நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என கோலி தெரிவித்தார்.
கடனத் 2010 முதல் இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார் கோலி. இதுவரை 125 போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 4,188 ரன்கள் எடுத்துள்ளார். 38 அரைசதம் மற்றும் 1 சதம் விழாசியுள்ளார்.