துபாய்: என் தனிப்பட்ட சாதனையை விட அணியின் வெற்றி தான் முக்கியம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, 49.3 ஓவர்களின் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்களை எடுத்தது.
இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 267 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. போட்டிக்கு பின்னர்
சாதனை படைப்பதை விட அணி வெல்வதே முக்கியம் என கோலி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றிக்கு பின் பேசிய அவர், இந்த போட்டியில் சதம் அடித்திருந்தால் நன்றாகத் தான் இருந்திருக்கும், ஆனால், அதை விட அணி வெல்வதே முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்துள்ளார்.
மேலும், சதத்தை தவற விட்டது தனக்கு வருத்தமில்லை எனவும், தனிப்பட்ட சாதனைகளை தான் எப்போதுமே யோசித்தது இல்லை என்றும் கூறியுள்ளார்.