பெங்களூர் : கோலியின் ஃபேவரட் எதிரணி எது தெரியுங்களா?
ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் CSK vs RCB மோதும் போட்டிகள் தான், IPL வரலாற்றில் தான் எதிர்கொண்ட படு உற்சாகமான மற்றும் பரபரப்பு மிக்க போட்டிகள் என கோலி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு மைதானத்தில் RCB-க்கு இணையாக CSK ரசிகர்களும் நிரம்பியிருப்பார்கள் எனவும், இது பதற்றத்தையும், உற்சாகத்தையும் ஒருசேரக் கொடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
IPL-ல் எதிர்கொண்ட கடுமையான போட்டி எது என்ற கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார். இதனால் விராட் கோலிக்கு பிடித்த எதிரணி சென்னை அணி தான் என தெரியவந்துள்ளது.