ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அற்புதமாக இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவின் க்ளென் மேக்ஸ்வெல் தனது வியத்தகு இரட்டை சதத்தின் மூலம் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்புகளை அழித்தார். அன்று க்ளென் மேக்ஸ்வெல் செய்ய முடியாததை ஆப்கானிஸ்தான் கேட்சுகள் எடுத்து செய்ய வைத்தது.
2024 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் அவர்கள் நுழைந்தனர். ஆனால் அவர்கள் தென்னாப்பிரிக்காவிடம் தோற்றனர். இதற்குப் பிறகு, சில ஊடகங்கள் ஆப்கானிஸ்தானை இந்திய அணிக்குப் பிறகு ஆசியாவில் இரண்டாவது சிறந்த அணி என்று முத்திரை குத்தின. இந்த லேபிளை மறுத்த ரஷீத் கான் கூறியதாவது:- ஊடகங்களில், நாங்கள் ஆசியாவின் 2-வது சிறந்த அணி என்று அழைக்கப்படுகிறோம். நாங்கள் எங்களை அப்படி அழைக்கவில்லை. கடந்த காலத்தில் நாங்கள் சிறப்பாகச் செய்ததன் அடிப்படையில் அவர்கள் இந்த லேபிளை எங்களுக்கு வழங்கியுள்ளனர்.

ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பைகளில் சில பெரிய அணிகளை நாங்கள் வீழ்த்தியுள்ளோம். சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்தை வீழ்த்தினோம். அதனால்தான் நாங்கள் 2-வது சிறந்த அணி என்ற முத்திரையைப் பெற்றோம். எதிர்காலத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்றால், அந்த எண்ணிக்கை 2 ஆக இருக்காது. அது 3, 4, 5, 6 ஆகக் குறையும். அந்த முத்திரையை நாங்கள் எங்களுக்குக் கொடுத்துக் கொள்ளவில்லை.
அந்த நாளில் நாங்கள் எப்போதும் சிறப்பாக விளையாட முயற்சிக்கிறோம், அணிகளை வெல்ல விரும்புகிறோம். சில நேரங்களில் நாங்கள் நன்றாக விளையாடுகிறோம், சில நேரங்களில் நாங்கள் விளையாடுவதில்லை, இவை அனைத்தும் விளையாட்டில் இயல்பானவை. ஆனால் நாங்கள் நன்றாக விளையாட உறுதியுடனும் இருக்க வேண்டும்.”
இந்த ‘ஆசியாவின் 2-வது சிறந்த அணி’ சமீபத்திய ஆசிய கோப்பை டி20 போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேசத்திடம் தோற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறத் தவறியது குறிப்பிடத்தக்கது.