மும்பை: அக்டோபர் 2 முதல் 14 வரை நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரிஷப் பண்ட் காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால், முதன்மை விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெல் சேர்க்கப்பட்டுள்ளார். மாற்று விக்கெட் கீப்பராக தமிழக வீரர் நாராயண ஜெகதீசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கருண் நாயர், இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு பெரவில்லை என்பதால் அணியில் இருந்து நீக்கப்பட்டு, அவரது இடத்திற்கு தேவ்தத் படிக்கல் கொண்டு வரப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சாளராக ஆகாஷ் தீப் நீக்கப்பட்டு, ஸ்பின்னராக அக்சர் படேல் இணைக்கப்பட்டுள்ளார். ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு துணைக் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அணி விவரம்:
பேட்ஸ்மேன்கள்: சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல்
ஆல்ரவுண்டர்கள்: ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், நிதீஷ் குமார் ரெட்டி
விக்கெட் கீப்பர்கள்: துருவ் ஜுரெல், ஜெகதீசன்
வேகப்பந்துவீச்சாளர்கள்: பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா
ஸ்பின்னர்: குல்தீப் யாதவ்
இந்த தொடரில், இந்தியா 4 ஸ்பின்னர்கள் கொண்டு விளையாடுவதால், சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ளும் திட்டம் கவனத்திற்கு வருகிறது.