ஐபிஎல் 2025 தொடரை மீண்டும் மே 16ஆம் தேதி தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதனால் இறுதி போட்டி மே 30ஆம் தேதி நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த மாற்றத்தை அட்டவணையில் இணைத்து வெளியிடும் பணியில் பிசிசிஐ இறங்கியுள்ளது. ஆனால் மத்திய அரசின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என்பது முக்கியமான செய்தியாகும்.

அரசு அனுமதி தாமதமானால், தொடரும் தாமதமாக முடிவடையும் வாய்ப்பு உள்ளது.இந்த தாமதம் இந்திய அணிக்கு புதிய சவாலாக அமைந்திருக்கிறது. ஐபிஎல் முடிவடையும் நேரத்துக்குப் பிறகு இந்திய அணி இங்கிலாந்து பயணத்தை மேற்கொள்ள உள்ளது. அங்கு ஐந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த தொடர் ஜூன் 19ஆம் தேதி தொடங்கும். அந்த சுற்றுப்பயணம் இங்கிலாந்தில் நடைபெறுவதால், இந்திய வீரர்கள் போதிய பயிற்சி பெற வேண்டும்.
இங்கிலாந்து பவுலர்களை எதிர்கொள்வதற்கு முன், சுற்றுப்பயணத்திற்கு முன் பயிற்சி ஆட்டங்கள் அவசியம். ஆனால் ஐபிஎல் முடிவில் தாமதம் ஏற்பட்டால், வீரர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு நேரடி பயணமே ஏற்படும். பயிற்சிக்கான நேரம் குறைய வாய்ப்பு உள்ளது.இங்கிலாந்து மண்ணில் கடந்த வெற்றி 2007 ஆம் ஆண்டு தான். அதன் பிறகு இந்தியா தொடரை கைப்பற்ற முடியவில்லை.
கடந்த முறை கொரோனாவால் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதை இங்கிலாந்து வென்று தொடரை சமன் செய்தது. இப்போதும் தொடரில் வெற்றி பெற விரும்பும் இந்திய அணிக்கு தீவிர தயாரிப்பு தேவைப்படுகிறது.இந்திய அணிக்கு பயிற்சி நேரம் குறைந்தால், தொடரில் தோல்வி சந்திக்க நேரிடலாம். கிரிக்கெட் வல்லுநர்கள் இதை கவலைக்குறியாக பார்க்கின்றனர். பிசிசிஐ முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய தருணம் இது. ஐபிஎல் தொடரின் தாமதம், இந்திய அணியின் தயாரிப்பை பாதிக்கக்கூடும்.