சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரன், இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷை எதிர்கொள்கிறார். 14 சுற்றுகள் கொண்ட இந்த ஆட்டத்தின் முதல் சுற்றில் டிங் லிரன் வெற்றி பெற்றார்.
இரண்டாவது சுற்று டிராவில் முடிந்தது. இதையடுத்து, மூன்றாவது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதையடுத்து, அடுத்த 6 சுற்றுகளும் சமநிலையில் முடிவடைந்தன. இதனால் இருவரும் 4.5 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இந்நிலையில் ஒரு நாள் இடைவேளைக்கு பின் இன்று 10-வது சுற்று ஆட்டம் நடக்கிறது.
இன்றைய சுற்றுடன் சேர்த்து இன்னும் 5 சுற்றுகளே எஞ்சியுள்ளன. 7.5 புள்ளிகளை எட்டிய முதல் வீரர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வார். சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தக்கவைக்க லிரனுக்கு இன்னும் 3 புள்ளிகள் தேவை. இதற்கிடையில், குகேஷுக்கும் முதல் முறையாக பட்டம் வெல்ல இன்னும் 3 புள்ளிகள் தேவை.