டெல்லி: இந்தியாவில் இந்த ஆண்டு 11.70 லட்சம் குழந்தைகள் பள்ளிக் கல்வி பெறவில்லை என்று மத்திய அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி தெரிவித்துள்ளார். மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி பதில் அளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

இந்தியாவில், 2024-25 நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் 11,70,404 குழந்தைகள் பள்ளிக் கல்வியைப் பெறவில்லை. உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக 7.84 லட்சம் குழந்தைகள் உள்ளனர். ஜார்க்கண்டில் 65,000 குழந்தைகளும், அசாமில் 63,000 குழந்தைகளும் பள்ளிக் கல்வியைப் பெறவில்லை. இந்தத் தரவைக் கண்காணிக்கவும் புதுப்பிக்கவும் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, கல்வி அமைச்சகம் பிரபந்த் (திட்ட மதிப்பீடு, பட்ஜெட், சாதனைகள் மற்றும் தரவு கையாளுதல் அமைப்பு) இணையதளத்தைப் பயன்படுத்துகிறது என்று அவர் கூறினார்.