ஜம்மு: இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ஜம்மு-காஷ்மீரில் வியாழக்கிழமை முறைப்படி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, பக்தர்கள் இரண்டு வழக்கமான பாதைகளில் யாத்திரையைத் தொடங்கினர்.
அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால். இதுவரை, 14,000 பேர் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், ஜம்முவில் உள்ள அடிப்படை முகாமில் இருந்து நேற்று 6,411 பேர் கொண்ட மூன்றாவது குழு அமர்நாத் யாத்திரைக்கு புறப்பட்டது.
இதில் 4,723 ஆண்கள், 1,071 பெண்கள், 37 குழந்தைகள் மற்றும் 580 சாதுக்கள் அடங்குவர்.