சிம்லா: ஹிமாச்சல் பிரதேசத்தில் ஒரே நாளில் தொடர்ந்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இன்று அதிகாலை 3.27 மணிக்கு சம்பா பகுதியில் முதல் நிலநடுக்கம் பதிவானது. ரிக்டர் அளவுகோலில் 3.3 எனப் பதிவானது.

அதனைத் தொடர்ந்து, மீண்டும் 4.39 மணியளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அளவு 4 ரிக்டர், மையம் 10 கிமீ ஆழத்தில் இருந்தது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கங்களால் எந்த உயிர் சேதமும் அல்லது பெரிய பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. ஆனால் மிகச் சிறிய இடைவெளியில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.