ரஜோரி: 79வது சுதந்திர தினத்தையொட்டி ஜம்மு காஷ்மீரில் 2 கிலோமீட்டர் நீளமுள்ள தேசியக் கொடியுடன் பிரமாண்டமான பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வில் 5000 பேர், அதில் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் என பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

நாளை நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக பல மாநிலங்களில் மூவர்ணக் கொடி யாத்திரைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு பேரணியில் மக்கள் தேசபக்தி முழக்கங்களுடன் கலந்து கொண்டனர். குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உற்சாகத்துடன் தேசியக் கொடியை ஏந்தி நடந்தனர்.
இந்த நிகழ்வு, வருங்கால சந்ததியினருக்கு தேசப்பற்று உணர்வை வளர்க்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டதாக ரஜோரி துணை ஆணையர் அபிஷேக் ஷர்மா தெரிவித்துள்ளார். பேரணி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுவாக செய்யப்பட்டிருந்தது.