இந்திய வானிலை மையம் தகவல் படி, 2025 ஆம் ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று (அக்டோபர் 16) முதல் தொடங்கியுள்ளது. இயல்பை விட அதிக அளவில் மழை பொழிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வட கடலோர மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் அதிக மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கி ஜனவரி 27 வரை தொடர்ந்த மழை நிலையில், இந்த ஆண்டு இயல்பை விட அதிக அளவு மழை பதிவாகும் என முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
வட கடலோர மாவட்டங்களில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டுகளில் டிசம்பரில் சென்னையில் 29 செ.மீ. முதல் 101.8 செ.மீ வரை மழை பதிவானது, அதேபோல் 2024-ஆம் ஆண்டில் இயல்பை விட 33% அதிகமாக மழை பெய்துள்ளது.
இந்நிலையில் மக்கள் மற்றும் விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்ற அபாயங்கள் இருக்கக்கூடும் என்பதால், வானிலை அலெர்ட்களை பின்பற்றி பாதுகாப்பான முறையில் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.