சென்னை: தமிழ்நாட்டில் 38 சதவீத காலணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது என்று ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
தோல் பொருட்கள் துறையில் முன்னோடியாக உள்ள தமிழ்நாடு, தற்போது தோல் அல்லாது காலணிகள் உற்பத்தி வளர்ச்சியை முன்னெடுத்து வருகிறது.
நாட்டின் காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் 38 சதவீத பங்கையும், தோல் பொருட்கள் ஏற்றுமதியில் சுமார் 47 சதவீத பங்கையும் தமிழ்நாடு வழங்குவதாக மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.